Site icon Madawala News

அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் கண்டெடுப்பு – கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 23 வயதுடைய அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்‌ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version