அரசியல்வாதிகள் பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தடை செய்யும் சட்டம் எதுவும் இல்லை என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாடசாலை முறையை அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று மட்டுமே தான் கூறியதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்தகைய கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை என்று கூறிய அவர் குறிப்பிட்டர்.
அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அரசாங்க உறுப்பினர்கள் பள்ளி விழாவில் எவ்வாறு கலந்து கொள்ள முடியும் என்பது குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.
இருப்பினும், 2024 செப்டம்பர் 26 ஆம் தேதி பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், அரசியல்வாதிகளை பாடாலை விழாக்களுக்கு அழைப்பதை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியதாகக் கூறப்பட்டது.