News
தேசபந்து தென்னகோனை பிடிக்க குற்றப் புலனாய்வுத் துறையின் 6 சிறப்பு விசாரணைக் குழுக்கள் களத்தில் இறங்கின .

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து அவர் தலைமறைவாகி உள்ள நிலையில் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் துறையின் 6 சிறப்பு விசாரணைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குற்றப் புலனாய்வுத் துறை சமீபத்தில் தேசபந்து தென்னகோனின் மனைவி மற்றும் மகனிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
அது ஹோகந்தரவில் உள்ள தேசபந்து தென்னகோனின் இல்லத்தில் நடந்தது.

