பாராளுமன்ற வீதியில் இடம்பெற்ற கோ*ர வி**பத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்த சம்பவம்.
பாராளுமன்ற வீதியில் இன்று (03) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் வயது 16 எனவும், காரின் அதிவேகமே விபத்துக்குக் காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற வீதியில் உள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து மற்றொரு காரின் பின்பக்க கெமராவில் பதிவாகியிருந்தது.
கார் அதிவேகமாக சென்று எதிர் திசையில் பயணித்த வேன் மீது பயங்கரமாக மோதியது பதிவானது.
விபத்து நடப்பதற்கு முன், காரை ஓட்டிச் சென்றவர் அதிவேகமாக ஓட்டிச் சென்றதை, மற்றுமொருவரும் தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
இந்த விபத்தில் கார் இரண்டாக பிளந்ததுள்ளது.
விபத்து நடந்தபோது, காரில் 4 பேர் பயணம் செய்தனர், அதில் ஒருவர் இறந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.
காரில் பயணித்த ஒருவர் தற்போது தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான வேன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டதாரி நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும் அதில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.