News

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தில் 29 இலட்சம் பணம் மாயம் ! பெண் உத்தியோகத்தர் கைது

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியம் உரிய விவசாயிகளுக்கு வழங்காமல் அவற்றைக் கொள்ளையடித்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று சுசந்த குமார நவரத்னவால் வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே விவசாய பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 155 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியம் 2,934,310 ரூபாய் கொள்ளியிடப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த விவசாயிகளின் உர மானியத்துக்கான நிதி காணாமல் போனமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறினார்

Recent Articles

Back to top button