News
இது ஒரு வெறுப்பூட்டும் பட்ஜெட் – மக்களுக்கு எதிராக பழிவாங்கும் நோக்கில் IMF உடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் அரசாங்கம் முயற்சி ; சஜித் குற்றச்சாட்டு

மக்களுக்கு விரோதமாக நடந்து கொள்ளும் மக்களுக்கு எதிராக அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிதியமைச்சின் செலவின தலைப்புகள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.
“சுருக்கமாகச் சொன்னால், அரசாங்கம் IMF இன் தாளத்திற்கு நடனமாடும் ஒரு IMF கைப்பாவையாக மாறிவிட்டது.”
தொழில் துறையை எவ்வாறு மேம்படுத்துவது? விவசாயத் தொழிலை எவ்வாறு மேம்படுத்துவது? திட்டம் என்ன? இவற்றில் எதற்கும் எந்த திட்டமோ அல்லது நடைமுறையோ இல்லை.
IMF சொல்வதற்கு எல்லாம் “ஆமா சாமி ” என்று சொல்லும் அரசாங்கம், இது மக்களின் ஆணையை அப்பட்டமாக மீறுவதாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

