வங்குரோத்தடைந்த நாட்டை மீட்டதால் நாம் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அமோக வெற்றியீட்டுவோம் !

பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையில் இருந்த ஸ்திரமற்ற நாட்டை மிகக்குறுகிய காலத்தில் ஸ்திரப்படுத்த முடிந்ததன் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கம் சிறப்பாக வெற்றிபெற முடியும் என அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும் நாட்டை கட்டியெழுப்ப தம்மால் முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு மாதங்களில் நிர்வாகச் செயற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் என்ன கூறினாலும், முன்பை விட தற்போது பொதுமக்கள் அதிக நம்பிக்கையுடன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா மாவட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேசிய மக்கள் சக்தி வேட்புமனுக்களை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ஜயசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

