சகோதரர் முஜிபுர் ரஹ்மான் உங்களை போல அனுர அலையில் அள்ளுண்டு வந்தவர் அல்ல ; அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கு ரீஸா சரூக் பதில்

சகோதரர் முஜிபுர் ரஹ்மான் உங்களை போல அனுர அலையில் அள்ளுண்டு வந்தவர் அல்ல என அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கு கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ரீஸா சரூக் பதில் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
“நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் முஜிபுர் ரஹ்மானின் அரசியல் சீரழிந்துவிட்டதாகவும் கூறியுள்ள அவர் மாளிகாவத்தை வட்டாரத்தை வென்று காட்டுமாறு சகோதரர் முஜீபுர் ரஹ்மானுக்கு சவால் விட்டுள்ளார்.
கடந்த இரண்டு தசாப்த காலத்துக்கும் மேலாக மக்களோடு மக்களாக நின்று அரசியல் செய்து வரும் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் போன்று அனுர அலையில் அள்ளுண்டு வந்த தேங்காய் கோம்பை அல்ல என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
அனுர அலையில் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றம் வந்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராமலிங்கம் சந்திரசேகரை போல சகோதரர் முஜிபுர் ரஹ்மான் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க ஒரு போது கடைக்கு சென்றவர் அல்ல என்பதை சகோதரர் முஜிபுர் ரஹ்மானின் கடந்த கால அரசியலை விமர்சித்துள்ள ராமலிங்கம் சந்திரசேகருக்கு நான் நினைவு படுத்த விறும்புகிறேன்.
தற்போதய ஆட்சியாளர்களின் பொய்களை நம்பி வாக்களித்து கைசேதப்பட்டுள்ள ஒட்டுமொத்த மக்கள் இந்த தேர்தலில் அரசுக்கு சிறந்த பாடத்தை புகட்டுவார்கள் என்பதை மாளிகாவத்தை வட்டாரத்தை வென்று காட்டுமாறு கூறியுள்ள ராமலிங்கம் சந்திரசேகருக்கு நாம் சொல்லி வைக்க விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

