News

நாம் பிரதேச சபை தேர்தலில் வென்றவுடன், வீதியில் அலையும் கட்டாக்காலி மாடுகளை அறுத்து,  இறைச்சியை ஏழைகளுக்கு வழங்குவோம் ; தலைமை வேட்பாளர் நளீர் அபூபக்கர் 

– தலைமை வேட்பாளர் நளீர் அபூபக்கர்

பாறுக் ஷிஹான்

வீதியில் மக்களின் போக்குவரத்தினை சீர்குலைக்கும் கட்டாக்காலி மாடுகள் உடனடியாக  பிடிக்கப்பட்டு ஏழைகளுக்கு அறுத்து பங்கிடவேண்டிய நிலைமை ஏற்படும்  என நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலில் கால்பந்து சின்னம் சுயேச்சைக் குழு  தலைமை வேட்பாளர் நளீர் அபூபக்கர்  தெரிவித்தார்.


அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச  சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் பகுதியில் உள்ள அவரது அலவலகத்தில் இன்று(23) நடாத்திய விசேட ட ஊடகவியலாளர் சந்திப்பில்   கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்



நாவிதன்வெளி பிரதேச சபை அதிக வரிச் சுமையை மக்களுக்கு விதித்துள்ளது. இது ஒரு பாரிய அநீதி. பிரதேச சபை அதிகாரத்தை மக்கள் எனக்கு வழங்கினால் நிச்சயம் இவைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும்.கட்டாக்காலி மாடுகள் நாய்கள் வீதிகளில் அதிகளவாக காணப்படுகின்றன.

எதிர்காலத்தில் நாவிதன்வெளி பிரதேச சபைக்கு செல்வோமாயின் கட்டாக்காலி மாட்டு உரிமையாளர்களை அழைத்து கலந்துரையாடுவோம்.  இது தவிர கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு அறிவிப்போம்.  

அவ்வாறு எமது சபையின் ஊடாக விடுக்கப்படும் அறிவுறுத்தலை மீறும் கட்டாக்காலி மாடுகள் உடனடியாக  பிடிக்கப்பட்டு ஏழைகளுக்கு அறுத்து பங்கிடவேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

பிரதேச சபை விதித்துள்ள வரிகளை குறைப்பதே திட்டம்.மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன்

நாவிதன்வெளி பகுதியில் 4 இறைச்சி கடைகள் உள்ளன. கேள்வி மனு பல இலட்சமாக உள்ளது. இதனை குறைத்தால் ஒரு கிலோ இறைச்சியை 1800 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும்.

வீணாக மக்கள் மீது அதிக வரிச்சுமை பிரயோகிக்கப்பட்டுள்ளது. நாவிதன்வெளி பிரதேச சபை அதிகாரம் எமது குழுவுக்கு கிடைக்கும் பட்சத்தில் ஒரு மாதகால இடைவெளிக்குள் இவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பேன்.

திருமண மண்டபத்துக்கும் அதிக வரி இங்கு அறவிடப்படுகின்றது.

அதாவது  ஒரு திருமணத்துக்கு 50 ஆயிரம் ரூபா அறியப்படுகின்றது. இதுவும் நிவர்த்தி செய்யப்படும் என்றும் நளீர் அபூபக்கர் மேலும்  தெரிவித்துள்ளார்

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
Journalist-මාධ්‍යවේදී

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button