News
இனவாதத்தை தூண்டும்வகையில் பேசுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

இனவாதத்தை தூண்டும்வகையில் பேசுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில்
அரசு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் குறிப்பிட்டார்.
நாட்டில் சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்ப வேண்டி 2015 இல் உருவாக்கப்பட்ட சமாதானம் சகவாழ்வுக்கான அமைப்பினை அனைத்து சமூகங்களையும் உள்வாங்கி சிறந்த குழுவை உள்வாங்கி அமைத்துள்ளோம். அவர்கள் நாளை ஒன்று கூடி நாட்டில் சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்ப எவ்வாறான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளமுடியும் . நாட்டில் சமாதானத்துக்கும் சகவாழ்வுக்கும் பங்கம் விளைவிக்கும் விடய்ஙக்ளை விலக்கி செயற்படலாம் என்பது பற்றி அவர்கள் கலந்துரையாட உள்ளனர் என கூறினார்.



