News
கிழக்கில் இயங்கும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, விசாரணைகளைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் செயல்படும் முஸ்லிம் அடிப்படைவாத குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் ,
கிழக்கு மாகாணத்தில் செயல்படும் அடிப்படைவாத குழு குறித்து பாதுகாப்புப் படையினர் மிகுந்த விழிப்புடன் இருப்பதாகக் கூறினார்.
முந்தைய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தப் பகுதியில் செயல்படும் ஒரு முஸ்லிம் அடிப்படைவாத குழு தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்..
மேலும், இந்தக் குழுவைப் பற்றிய கூடுதல் விவரங்களை வெளிக்கொண்டு வர பொலிஸ் புலனாய்வுத் துறையும் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

