News
புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் பாராட்டு

பெருந்தோட்ட மக்களுக்கு வீட்டுவசதி மற்றும் ஏனைய சலுகைகளை வழங்குவதில் கட்சி பேதமின்றி புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்னவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கு தேயிலை, தேங்காய் மற்றும் இறப்பர் தொழிற்துறைகளில் செயல்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

