News
சாமர சம்பத்திற்கு பிணை – மீண்டும் கைது

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வினால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சற்றுமுன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதும் மற்றுமொரு வழக்கில் அவருக்கு ஏப்ரல் 1 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இந்த இன்று காலை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

