News
மொஹமட் ருஷ்டியை மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற TID

இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட நிட்டம்புவ வாலிபர் மொஹமட் ருஷ்டியை மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அனுமதி பெற்றுள்ளதாக கைது செய்யப்பட்ட குறித்த வாலிபரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.
இஸ்ரேலுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை
ஒட்டிய சந்தேகத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட குறித்த வாலிபர் ருஷ்டி தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அனுமதி பெற்றுள்ளதாக கைது செய்யப்பட்ட குறித்த வாலிபரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.



