News
மோசடியில் ஈடுபடுவோர் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயார் – ஜனாதிபதி

தற்போது அரசாங்கத்திற்கு எதிராக அதிகம் கூச்சலிடுபவர்கள் அதிகமாக அச்சத்தில் உள்ளவர்களே என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பெலியத்தவில் தெரிவித்தார்.
மே மாதத்தில் பெரும் எண்ணிக்கையிலான சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடரப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
இது குழப்பமடைய வேண்டிய விடயம் அல்ல என்று கூறிய ஜனாதிபதி, மிகவும் வலுவாக வழக்கை தாக்கல் செய்து வழக்கை விசாரித்த பின்னர் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
மூன்று முன்னாள் அமைச்சர்கள் தற்போது விளக்கமறியலில் இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அவர்கள் சிறிது காலம் கழித்து நாடாளுமன்றத்தை அங்கு நடத்த முடியும் என்றும் தெரிவித்தார்.



