கல்முனை ஸாஹிரா மைதானத்தில் நடக்கவிருந்த பெருநாள் தொழுகை சில அடிப்படை தீவிரவாதிகள் தலையீட்டால் தடுக்கப்பட்டது என முபாறக் மெளலவி அறிவிப்பு

கல்முனை ஸாஹிரா மைதானத்தில் நடக்கவிருந்த பெருநாள் தொழுகை சில அடிப்படை தீவிரவாதிகள் தலையீட்டால் தடுக்கப்பட்டுள்ளது.
இது அரசியல் அதிகாரம் இல்லாத அனாதைச்சமூகமான ஏகத்துவ வாதிகளுக்கு பாடமாகும்.
இன்று உங்களுக்காக தடையை நீக்க நீங்கள் காலாகாலமாக ஓட்டுப்போட்ட உங்கள் முன்னாள், இன்னாள் எம்பீக்களோ, மேயர்களோ, எம்பீக்களாக இருக்கும் ரவூப் ஹக்கீமோ, ரிசாத் பதியுதீனோ வரவில்லை. காரணம் உங்களுக்கென ஜனநாயக அரசியல் பலம் இல்லை.
இந்தப்பலத்தை எடுக்க 2011ம் ஆண்டு ஹுதா பள்ளி ஆதரவில் நான் தேர்தலில் நின்றேன். அன்சார் முஹம்மதியா பள்ளிவாயல் என்னை தோற்கடிக்க இன்னொருவரை மு. காவில் நிறுத்தி நமக்கான அரசியல் அதிகார முயற்சியை தோற்கடித்தார்கள்.
ஏகத்துவ வாதிகள் அரசியல் கட்சி ரீதியில் ஒன்று பட்டு நமக்கான அரசியல் அதிகாரத்தை கையில் எடுக்காத வரை இத்தகைய தடங்கல்கள் வரத்தான் செய்யும்.
கல்முனை மாநகரசபையில் தவ்ஹீத்வாதிகளுக்கு ஒரு உறுப்பினர் கூட எடுக்க முடியாத அளவுக்கு கொஞ்சப்பேர்தான் கல்முனையில் உள்ளனர் என்பதையே அரசுக்கு காட்டுகிறது.
இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் மூலமும் சேவை செய்யலாம் என்பதை காட்டும் கடமை நமக்குண்டு. குர்ஆன், ஹதீத் அடிப்படையில் நேர்மையாக வாழ வேண்டும் என சொல்லும் நம்மால்தான் நேர்மையான அரசியல் செய்து ஏனைய மக்களுக்கும் வழி காட்ட முடியும்.
கல்முனை தொகுதி தவ்ஹீத் அமைப்புக்கள் எம்முடன் ஒன்று சேர மு வந்தால் இன்ஷால்லாஹ் 5 பேரை கல்முனை மாநகரசபையில் உறுப்பினராக்கலாம். அது போல் அம்பாரை மாவட்ட தவ்ஹீத்வாதிகள் விழிப்படைந்தால் ஒரு எம்பியை பெற முடியும்.
அரசியல் அதிகாரம் இல்லாத சமூகம் தலை குணிந்து வாழ வேண்டி வரும்.
இவற்றை சொல்வதன் மூலம் நான் அரசியல் அதிகாரத்துக்கு ஆசைப்படுவதாக சிலர் நினைக்கலாம். இனி மக்களிடம் சென்று ஓட்டுக்கேட்கும் வகையில் எந்த தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் என்ற உறுதியோடு இருக்கிறேன். மற்றவர்களை அதிகாரத்துக்கு அனுப்புவதற்கு முயற்சி செய்கிறேன்.
சொல்வது மட்டுமே என் கடமை. செயல்படுத்துவது உங்கள் பொறுப்பு.
முபாறக் அப்துல் மஜீத் முப்தி
தலைவர்
உலமா கட்சி
30.3.2025



