News

கலாநிதி M.C.M. Nasvi அவர்கள் குறைந்த வயதிலேயே குடிசார் பொறியியல் (Civil Engineering) துறையில் பேராசிரியராகப் பதவி உயர்வு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் Civil Engineering துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் Dr. M.C.M. Nasvi அவர்கள் 27 பெப்ரவரி 2023 முதல் தகுதி அடிப்படையில் சிவில் பொறியியல் பேராசிரியராக (Professor in Civil Engineering on-merit) பதவி உயர்வு பெற்றுள்ளார். Dr. Nasvi அவர்கள் 38 வயதில் இந்த பணி சார்ந்த மைல்கல்லை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தகுதி அடிப்படையிலான (merit-based) பேராசிரியர் பதவியுயர்வு ஒரு கடுமையான மதிப்பீட்டுத் தேர்வை (rigorous evaluation process) உள்ளடக்கியது. இதில் விண்ணப்பதாரியின் பங்களிப்புகள் பின் வரும் முக்கிய மூன்று துறைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றன: (1) கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாடு (Teaching and Academic Development), (2) ஆராய்ச்சி மற்றும் படைப்பாற்றல் பணிகள் (Research and Creative Work), மற்றும் (3) பல்கலைக்கழக மற்றும் தேசிய வளர்ச்சியினூடே அறிவைப் பரப்பல் (Dissemination of Knowledge, along with University and National Development).

A.L.M. கரீம் மற்றும் S. மர்லியா ஆகியோரின் மகனாகப் பிறந்த Dr. Nasvi அவர்கள் ஆறு குழந்தைகளில் நான்காமவர் ஆவார். இவர் குருணாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பிரதேச செயலகத்தில் உள்ள இகல கினியம எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், இவரின் கல்விக்காக இவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் செய்த தியாகங்களை Dr. Nasvi அவர்கள் நன்றியுடன் நினைவுகூர்கிறார். கல்வியில் சிறந்த சாதனைகளை அடைந்துள்ள குடும்ப மரபை பிரதிபலிக்கும் வகையில், இவரது சகோதரர்களில் மூவர் பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், மற்றும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்களாவர்.

இவர் தனது தொடக்கக் கல்வியை இகல கினியம முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை கல்முனை சாஹிரா கல்லூரியிலும் பெற்றார். 2004 ஆம் ஆண்டில் உயர்தர (A/L) பரீட்சையில் சித்தியடைந்ததை அடுத்து, 2005 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்றார். 2009 ஆம் ஆண்டில் Civil Engineering துறையில் First Class Honours உடன் இளநிலைப் பட்டம் (Bachelor Degree) பெற்றதுடன், அதில் சிறப்பான கல்வி அடைவுகளுக்காக மூன்று விருதுகளையும் பெற்றார்.

பின்னர், அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் உள்ள Monash பல்கலைக்கழகத்தில் (Monash University, Australia) PhD படிப்பைத் தொடர்வதற்காக full scholarship (Tuition Fee and Living Allowance) பெற்று 2010 ஆம் ஆண்டில் தனது PhD ஆய்வை ஆரம்பித்தார். இவரது PhD ஆய்வு புவி தொழில்நுட்ப பொறியியல் துறையில் மேற்கொள்ளப்பட்டதுடன் ஆய்வறிக்கையின் தலைப்பு “Geopolymer as Well Cement for Geological Sequestration of Carbon Dioxide” என்பதாகும். தனது PhD ஆய்வில், வளிமண்டல carbon dioxide ஐக் குறைப்பதற்கான கார்பன் கவரப்படுதல் மற்றும் சேமிப்பு (Carbon Capture and Storage) தொழில்நுட்பத்தில் ஆழ்துளை கிணறுகளில் பாவிப்பதற்காக ஜியோபொலிமெர்ஸ் (Geopolymers) எனும் ஒரு புது வகையான சிமெண்ட்டை ஆய்வு செய்தார். 2014 ஆம் ஆண்டில் தனது PhD படிப்பை வெற்றிகரமாக முடித்து PhD பட்டத்தைப் பெற்றார்.

ஜனவரி 2015 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் Civil Engineering துறையில் தற்காலிக விரிவுரையாளராக (Temporary Lecturer) சேர்ந்த இவர், ஏப்ரல் 2015 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார். அதன் பின்னர், மே 2015 இல் விரிவுரையாளராக (Lectuer) நியமிக்கப்பட்டு, அக்டோபர் 2016 வரை அந்தப் பதவியினைத் தொடர்ந்தார். நவம்பர் 2016 இல் இருந்து பிப்ரவரி 2023 இல் பதவி உயர்வு பெறும் வரை, Civil Engineering துறையில் மூத்த விரிவுரையாளராக (Senior Lecturer) பணியாற்றினார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில், இவர் தனது ஆராய்ச்சியை பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தினார். இதில் ஜியோபொலிமெர்ஸ் (Geopolymers), பிரச்சனைக்குரிய மண் (Problematic Soils), நில மேம்பாடு (Ground Improvement), மற்றும் சரிவு நிலைத்தன்மை (Slope Stability) உள்ளிட்டவை அடங்கும். மொத்தமாக 60க்கும் மேற்பட்ட publications ஐ (Journal and Conference Papers) இவர் வெளியிட்டுள்ளதுடன், பல்வேறு ஆராய்ச்சி மானியங்களையும் (Research Grants) பெற்றுள்ளார். அத்தோடு, இவருடைய மேற்பார்வையில் இது வரை இரண்டு PhD ஆய்வாளர்கள், ஒரு MPhil ஆய்வாளர், மற்றும் ஆறு Master பட்ட ஆய்வாளர்கள் தங்களது பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ளனர். சிறப்பான ஆராய்ச்சி சாதனைகளால் பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். அவற்றில், பேராதெனிய பல்கலைக்கழகத்தின் Tier 4* விருது (UGC circular 05/2018 இன் பிரகாரம்), National Science Foundation (NSF) வழங்கிய SUSRED 2023 விருது (Support Scheme for Supervision of Research Degrees 2023), மற்றும் National Research Council (NRC) வழங்கிய அறிவியல் வெளியீடுகளுக்கான NRC Merit Award ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மேலும் இவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (SEUSL) மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (OUSL) ஆகியவற்றில் வருகை விரிவுரையாளராகவும் (Visiting Lecturer) பணியாற்றியுள்ளார். அது மட்டுமன்றி, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல நிர்வாகப் பொறுப்புகளையும் வகித்துள்ளார், அதில் Coordinator/Postgraduate Programme in Geotechnical Engineering, Coordinator/Internal Quality Assurance Cell (IQAC), Faculty of Engineering, மற்றும் Coordinator/Joint PhD Programme between RMIT University, Australia, and University of Peradeniya என்பன குறிப்பிடத்தக்கவை. கல்வித்துறைக்கு அப்பால், Civil Engineering Consultant ஆகவும், பல Workshops மற்றும் Continuing Professional Development (CPD) செயல்திட்டங்களுக்கு Resource Person ஆகவும் செயல்பட்டுள்ளார்.

இவருடைய மனைவி Fathima Husna பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாவார். இவர்களுக்கு Fathima Zaina, Fathima Rukaiya மற்றும் Hiba என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இளம் வயதில் இந்த சாதனையை அடைய இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் செய்த உதவி மற்றும் தியாகங்களுக்கு இவர் நன்றி கூறுகிறார்.

பொறியியல் மாணவர்கள், பல்கலைக்கழகம், மற்றும் Civil Engineering தொழில் துறையின் நலனுக்காக தனது எதிர்காலத்தை அர்ப்பணிப்பதையே தனது இலக்காகக் கொண்ட இவர், தனது இந்த சாதனையை அதிக பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதற்கும், எதிர்கால பொறியியலாளர்களுக்கு ஊக்கமளிப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் கருதுகிறார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button