ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரங்களில் முன்னர் போல் அல்லாமல் புகைப்படங்கள், ட்ரோன் வீடியோக்கள் குறைவு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று மூன்று மக்கள் பேரணிகள் நடைபெறவுள்ளன.
இவை மாத்தறை மாவட்டத்தில் உள்ள தெய்யந்தர, பிடபெத்தர மற்றும் வெலிவிடிய ஆகிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு, ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நாடு முழுவதும் மாவட்ட அளவில் மக்களைச் சந்தித்து உரையாற்றும் முக்கிய பேரணிகளை திட்டமிட்டுள்ளார்.
இதை அடிப்படையாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நேற்றைய தினம் இந்த பிரச்சாரத் திட்டம் தொடங்கப்பட்டு, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் மூன்று பேரணிகள் நடைபெற்றன.
இவற்றில் மக்கள் பெரும் திரளாக பங்கேற்று ஆதரவு வழங்கினர்.
ஆனால், முந்தைய தேர்தல்களைப் போலல்லாமல், இந்த பேரணிகளுக்குப் பின்னர் வான்வழி புகைப்படங்கள் அல்லது ட்ரோன் வீடியோக்கள் அதிகம் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக உள்ளது.



