ருஷ்டி கைது விவகாரம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு தமிழ் மொழியில் அனுப்பியுள்ள ஊடக அறிக்கை ..

22.03.2025 ஆந் திகதியன்று கொழும்பில் அமைந்துள்ள பல்பொருள் மத்திய நிலையத்தில் பணிப்புரிந்து வந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சில சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இவ்வாறு சமூக ஊடகங்களில் பரப்பி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதுடன், இவ்வாறான தகவல்கள் சமூகத்தில் பரப்புவதைத் தடுப்பது பொலிசாரின் கடமையாகும்.
இவ்வாறு ஒட்டப்பட்ட விளம்பரங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, இலங்கை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இவ் விசாரணையின் மூலம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த இளைஞர் தொடர்பாக வெளியாகியுள்ள தகவலுக்கமைய, அவர் வெறும் விளம்பரங்களை ஒட்டிவரும் செயல்களைத் தாண்டி அவர் கடும்போக்கைக் கொண்டவர் என்பதை அவதானிக்க முடிந்துள்ளது. மேலும் விசாரணைகளின் போது அவதானித்த சில முக்கிய தகவல்களின் படி, ஏதேனும் ஒரு வகையில் பயங்கரவாத செயற்பாடுகளின் போது உணர்வுடன் செயல்படும் நபர் என நியாயமான சந்தேகத்தின் அடிப்படையிலேயே கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ் சந்தேக நபரின் செயல்பாடுகள் தொடர்பாக நீண்டகால விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதற்கமைய வெளியாகியுள்ள விடயங்களுக்கு ஏற்ப இவர் சமூக வலைத்தளங்களை பாவித்தல் வேறு முறைகளைப் பயன்படுத்தியதன் காரணமாக மனரீதியான உந்துதலுக்கு ஆளாகியுள்ளார் என்பது அவதானிக்கப்பட்டுள்ளதால், இம் மனநிலையை அடிப்படையாகக் கொண்டு மதவெறித் தொடர்பான கோட்பாடுகளில் ஈடுபடுபவரா என்பது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது.
இச் சந்தேக நபரிடமுள்ள கணினி உதிரிப்பாகங்கள், தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் கைத்தொலைபேசிகள் தொடர்பான தடவியல் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலத்தில் நாடளாவிய ரீதியில் பல்வேறு மக்களுக்கிடையில் தங்களது தேசிய மற்றும் மதங்கள் தொடர்பான விழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் அதிகளவிலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தரும் சந்தர்ப்பங்களில் இக் கைது தொடர்பான தவறான கருத்துகளை சமூகத்தில் பரப்பிவருவதன் ஊடாக நாட்டின் ஒழுங்கு மாத்திரமின்றி தேசிய பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், இவ்வாறு தவறான தகவல்களை பரப்புவதிலிருந்து நாட்டின் ஒழுங்கு மற்றும் பல்வேறு சமூகங்களுக்கிடையில் நிலவும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இது தொடர்பாக மெற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை வெளிப்படைத் தன்மையுடன் நடாத்தப்பட்டு விரைவாக விசாரணைகளை முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு


