News
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித் பிரேமதாச தெரிவு

நடப்பாண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தவிசாளராக சஜித் பிரேமதாச அவர்களினது விசேட வேண்டுகோளின் பிரகாரம் மீண்டும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவு செய்யப்பட்டதோடு பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவும், தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்கவும், பொருளாளராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும், செயற்பாட்டு பிரதானியாக நளின் பண்டாரவும் இன்றைய மாநாட்டில் தெரிவானார்கள்.
ஏனைய பதவி நிலைகளுக்கு நியமிக்கப்பட்டவர்களின் விபரங்களையும், நடப்பாண்டுக்கான புதிய தேசிய செயற்குழு உறுப்பினர்களினது பெயர் பட்டியலையும் கீழே காணலாம்.



