News
கடையொன்றில் இருந்த ஆணையும் பெண்ணையும் குறி வைத்து துப்பாக்கி சூடு – ஒருவர் பலி #ஹிக்கடுவை

ஹிக்கடுவை பகுதியில் இன்று (03) 7 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் கடையொன்றில் இருந்த ஆணையும் பெண்ணையும் குறி வைத்து துப்பாக்கித் தாக்குதல் நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் என்று தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த பெண்ணின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



