News

100 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய மொபைல் போன்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய மொபைல் போன்களுடன் ஒருவர் கைது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, ரூ. 10 கோடியை கடந்த புதிய மொபைல் போன்களுடன் ஒரு சந்தேகநபர் இன்று (ஏப்ரல் 04) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த 32 வயது நபர் என்பதுடன், அவர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹோட்டல்களில் வேலை செய்த அனுபவம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இவர் தொடர்ந்து இலங்கைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்துவதாக சுங்க அதிகாரிகளால் முன்பே அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த அவர், மூன்று பயணப்பைகளை கொண்டு வந்துள்ளதுடன், அதில் 528 புதிய மொபைல் போன்கள் இருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button