சிகிச்சைக்கு வந்த இளம் பெண் நோயாளி ஒருவர், வைத்தியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கு GMOA வின் பதில்..

நீர்கொழும்பில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனையில் ஏற்பட்ட பாலியல் புகார் தொடர்பாக GMOA வின் பதில்..
நீர்கொழும்பில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெற்ற பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமான (GMOA) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு இளம் பெண் நோயாளி Outpatient Department (OPD) பகுதியில் சிகிச்சைக்காக வந்தபோது, அங்குள்ள மருத்துவர் ஒருவரால் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, குற்றச்சாட்டில் பெயர் குறிப்பிடப்பட்ட மருத்துவர், கடந்த 2021ஆம் ஆண்டே எம் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தவர் என்று GMOA தெரிவித்துள்ளது. அந்த மருத்துவர் தொடர்ச்சியான ஒழுங்குக்கேடுகள் காரணமாக சங்கத்தின் விதிகளுக்கு எதிராக நடந்துகொண்டதால் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் GMOA குறிப்பிட்டது.
இந்த சம்பவத்தில் உண்மை விளங்க, பாகுபாடற்ற விசாரணை அவசியம் எனவும், குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் GMOA வலியுறுத்தியுள்ளது.
“இத்தகைய தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை GMOA ஒருபோதும் பாதுகாக்காது அல்லது அனுசரிக்காது,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய சம்பவங்கள் நாட்டின் இலவச சுகாதார சேவையின் மீது மக்கள் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்பதையும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் GMOA உறுதியளித்துள்ளது.
அது மட்டுமல்ல, சுகாதாரத்துறையிலும், சமூகத்திலும் மதிப்பு மற்றும் மரியாதையை நிலைநாட்டும் முன்முயற்சிகளை நடத்துவதற்கும் சங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.


