News
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிறப்பு மருத்துவ மற்றும் அனர்த்த நிவாரணக் குழு இன்று மியான்மருக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பிரிகேடியர் புன்யா கருணாதிலக்க தலைமையிலான இலங்கை முப்படையைச் சேர்ந்த 26 பேர் அடங்கிய சிறப்பு மருத்துவ மற்றும் அனர்த்த நிவாரணக் குழு இன்று மியான்மருக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்த (ஓய்வு) மேற்பார்வையின் கீழ் இந்த அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

