தேர்தலுக்கு உதவி செய்தவர்களுக்கு டெண்டர் விதிமுறைகளை மீறி வேலைத்திட்டங்களை வழங்குவது மோசடி இல்லையா ?

தேர்தலுக்கு உதவி செய்தவர்களுக்கு டெண்டர் விதிமுறைகளை மீறி வேலைத்திட்டங்களை வழங்குவது மோசடி இல்லையா என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர் ,
அனுர ஆட்சியில் ஊழல் மோசடி இல்லையாம் ! தேர்தலுக்கு உதவி செய்தவர்களுக்கு டெண்டர் விதிமுறைகளை மீறி வேலைத்திட்டங்களை வழங்குவது மோசடி இல்லையா ? பிரபல வர்த்தகர் தம்மிக பெரேராவின் நிறுவனத்திற்கு 50 மெகாவோட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் டெண்டர் வழங்கபட்டுள்ளது.
தம்மிக பெரேராவின் கம்பனி டெண்டர் விதிமுறைகளை மீறியுள்ளன. மேன்முறையீட்டு சபையும் தம்மிக பெரேராவின் கம்பனி டெண்டரை நிராகரித்துள்ளது. இருந்தும் குறித்த டெண்டர் தம்மிக பெரேராவின் கம்பனி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் உதவி செய்த தனவந்தர்களுக்கு முறைகேடாக டெண்டர்களை வழங்குவது மோசடி இல்லையா ? இது ஆரம்பம் மாத்திரமே இன்னும் நிறைய வெளியே வரும் என அவர் குறிப்பிட்டார்.

