இலங்கை இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் எதிரொலி ! சீனா அதன் நேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது..

இலங்கையுடன் இந்தியா கைச்சாத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் காரணமாக சீனா உடனடியாக பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளதாக முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.
இப்போது சீனா பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் கல்விச் செயலாளர் திரு.புபுது ஜயகொட கூறுகிறார்.
எழுபது வருடங்களாக இலங்கை இவ்வாறானதொரு பாதுகாப்பு உடன்படிக்கையை எந்தவொரு நாட்டுடனும் செய்து கொள்ளவில்லை எனவும், இது வரலாற்றில் மிக மோசமான துரோகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் மூலம் இலங்கையை இந்திய-அமெரிக்காவை சார்ந்துள்ள நாடாக சீனா கருத ஆரம்பித்துள்ளதாகவும், இதற்கு பதிலடியாகவே இந்த புதிய பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.



