News

இவ் NPP அரசும் தனி இனவாதமாக செயல்படுகின்றது..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்த அரசை பிரதி நிதித்துவப்படுத்தும் குழுவில் ஓர் தமிழரோ, முஸ்லீமோ, மலையகத் தமிழரோ இல்லை (தமிழ் பிரதிநிதிகளே இல்லை). அவர்களின் உறுப்பினர்களில் தமிழ் பிரதிநிதிகள் இருந்தும் அவர்கள் அழைக்கப்படவில்லை. ஒதுக்கபட்டர்களோ தெரியவில்லை. அரசு முழு இனவாதமாக செயல்படுகின்றது.

தமில் மக்கள் எமக்கு வாக்களிக்காமல் விட்டிருந்தால் அவர்கள் அனுராதபுரத்தில் கூட்டத்தை வைத்து அவர்களின் இன பிரச்னையை மாத்திரம் கதைத்து விட்டு அனுப்பி இருப்பார்கள். மக்கள் எமக்கு வாக்களித்ததினால் எம்மால் இந்திய பிரதமரை சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைத்து மக்களின் பிரச்சனைகளை கையாள கூடியதாக இருந்தது. இம்முறை மக்கள் சிந்தித்து இவ் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கான பிரச்சனைகளை தமிழ் பேசும் மக்களே கையாள வேண்டும். அதனால் மக்களே சிந்தியுங்கள்.

கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400மில்லியனுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன்.

ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 51மில்லியன் ரூபாவினை மட்டுமே மாவட்டத்திற்கு ஒதுக்கீடுசெய்துள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு, மகிழுர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது இடமெற்ற எனது உரை.

Recent Articles

Back to top button