Site icon Madawala News

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய i t ஆசிரியர் உயிரிழந்த நிலையில் மீட்பு

வவுனியா,  நெளுக்குளம்,  பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி  கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பாெலிசார் தெரிவித்தனர்.

வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று (09.08)  காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, வேப்பங்குளம் 60 ஏக்கர் பகுதியை வசிக்கும் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியரான கிருஷன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் குறித்த ஆசிரியரின் துவிச்சக்கர வண்டி, பாதணி, குடை என்பனவும் பாெலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-வவுனியா தீபன்-

Exit mobile version