News

“இந்த அரசாங்கத்தில் பலவீனங்களும் தவறுகளும் உள்ளன.அதைத் தெளிவாகக் கூற வேண்டும்”

இந்த அரசாங்கத்தில் பலவீனங்களும் தவறுகளும் உள்ளன. அதைத் தெளிவாகக் கூற வேண்டும்” என நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறினார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த அரசாங்கத்தில் பலவீனங்களும் தவறுகளும் உள்ளன.அதை தெளிவுபடுத்த வேண்டும். NPP யின் பிரமுகராக இருந்த கலாநிதி திலிப விதாரணவின் பதவி விலகல் அரசாங்கத்தின் தரப்பின் பாரதூரமான விடயமாகும்.

மேலும்,சுகாதாரத்துறை மாணவர் போராட்டத்தில் காவல்துறையினரின் தாக்குதலும்,மாணவர்களை கைது செய்திருப்பதும் ஜனநாயகத்துக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கையாகும்.

NPP அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடு முற்றிலும் JVP பொலிட்பீரோ பொறுப்பேற்றது போல் தெரிகிறது.NPP செயற்குழுவானது அரசாங்கத்திற்கு எந்தவொரு செயலூக்கமான பங்களிப்பையும் செய்யவில்லை என்பது தெளிவாகின்றது.

இந்நிலை முற்போக்கு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் தடையாக மாற வாய்ப்புகள் அதிகம் என்றே கூற வேண்டும் என கூறினார்.

Recent Articles

Back to top button