ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் மற்றும் வாட்சப்பில் பகிர போவதாக அச்சுறுத்தி பணம் பறிக்கும் இரு நபர்கள் பொலிஸாரால் கைது.

இணையதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதாக மிரட்டிய இரண்டு சந்தேகநபர்கள் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் ஆபாச உள்ளடக்கங்களை பகிர போவதாக நபர் ஒருவரை மிரட்டி ரூ. 2,22,000 பெற முயற்சித்த கொழும்பு கோட்டையை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2025 ஜனவரியில் வடமேல் மாகாண பொலிஸ் கணினி குற்ற விசாரணை பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், பன்னிபிட்டியாவைச் சேர்ந்த இந்த சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
மற்றொரு வழக்கில், பண்டாரகமையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரும் சமூக ஊடகங்களில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரும் கடந்த ஜனவரியில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கஹதுடுவ பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரு வழக்குகளுக்கும் தொடர்பான மேலதிக விசாரணைகள் வடமேல் மாகாண பொலிஸ் கணினி குற்ற விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



