News

கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையானுக்கு  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“சமீபத்தில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் அவரைத் தொடர்புபடுத்தும் கணிசமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

எந்தவொரு குற்றத்தையும் மறைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், எந்தவொரு குற்றவாளியும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க மாட்டோம். நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது கட்டாயமாகும். நீதி வெல்ல வேண்டும், இதை அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்று அமைச்சர் விஜேபால கூறினார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான், 2006 ஆம் ஆண்டு ஒரு இளைஞர் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்பில் தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) காவலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button