ருஷ்டி கைது விவகாரம் ; TID அதிகாரிகளை இன்று மனித உரிமைகள் ஆணையம் அழைத்தது.

ருஷ்டியின் இந்த சட்டவிரோத கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு காரணமான TID அதிகாரிகளை இன்று மனித உரிமைகள் ஆணையம் அழைத்துள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் ஆர்வலர் முஹீத் ஜீரன் அவரது முகனூலிலத தகவல் வெளியிட்டுள்ளார்.
அதிகாரிகள் விசாரிக்கப்பட்டதாககவும், ஆனால் முழு அமர்வும் அவர்கள் தலையை குனிந்து வைத்திருந்தாகவும் ,மேலும் அவர்களிடம் பதிலளிக்க எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ள அவர்,
ருஷ்டியின் கைதுக்கு ஆதரவாகவும் நிரூபிக்கவும் எந்த வழியும் இருக்கவில்லை எனவும் மேலும் ருஷ்டியின் தரப்பிலிருந்து கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள் அமைதியாக இருந்தனர் என கூறியுள்ளார்.
காவல் துறைக்கு கிளியாக இருப்பதற்குப் பதிலாக,இந்த ஆளும் அரசியல்வாதிகள் ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிடும்போது தங்கள் பொது அறிவைப் பயன்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமைகள் ஆர்வலர் குறிப்பிட்டுள்ளார்.



