இனவாதம் மற்றும் அடிப்படை வாதத்திற்க்கு எதிராக 3 புதிய சட்டங்கள் !!

பயங்கரவாத தடை சட்டத்தை விட மிகக் கடுமையான 3 சட்டங்களை கொண்டு வந்து இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்திற்க்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மன்றில் அறிவித்தார்.
இன்று பாராளுமன்றில் உரையாற்றிய அவர்,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள வணிக வளாகத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர் தொலைபேசியினை பகுப்பாய்வு செய்ததுடன் குறித்த நபரின் சமூக வலைதள செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தபோது அவரது தொலைபேசியில் சேமிக்கப்பட்டிருந்த தொடர்பு இலக்கங்களில் ஈஸ்டர் தாக்குதல் சூதிரதாரி சஹ்ரான் ஹஷீமின் அடிப்படைவாத வகுப்புக்கு சென்ற சந்தேக நபர்களுடன் தொடர்புகளை பேணியவர்களின் தொடர்புகள் இருந்தமை தெரியவந்துள்ளது
மேலும் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுல் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யப்படும் வழக்கின் பிரதான சந்தேக நபருடன் தொடர்பில் இருந்தமை ஊர்ஜிதமாகியுள்ளது.
மேலும் குறித்த வாலிபர் பாவித்துள்ள யு டியூப் கணக்கு யூ டியுப் நிறுவனத்தினால் தடை செய்யப்பட்டுள்ளமை ஊர்ஜிதமாகியுள்ளது.குறிப்பாக சமூக ஒற்றுமையை குழைக்கும் செயல்களை குறித்த சமூகவலைகள் ஊடாக செய்தாலேயே இதுபோன்று சமூக வலை தளங்கள் தடை செய்யப்படும்.
குறித்த வாலிபர் பணியாற்றிய இடத்தில் பணி நிமித்தம் வழங்கப்பட்ட கணனி மற்றும் பிரிண்டரில் குறித்த ஸ்டிக்கரை அச்சிட்டுள்ளமை தெரிவந்துள்ளது.மேலும் இந்த வாலிபர் தொடர்பில் மேலும் விசாரணைக்கு உற்படுத்திய போது அவர் ஏதோவொரு சுய உந்துதலுக்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
ஐஸ் எஸ் அமைப்பினால் ரமழான் மாதத்தில் தற்கொலை தாக்குதலை ஊக்குவித்து அவர்களது சமூகவலைகளில் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்களின் பின்புலத்தில் இந்த வாலிபர் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தான மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பினை நடைமுறைப்படுத்த தடையாக இருக்கும் செயற்பாட்டினை செய்யக்கூடிய நபராக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2025.03.22 குறித்த நபரை கைது செய்து 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்தோம்.அதன் பின்னரே அவரை மேலும் தடுத்து வைத்து விசாரணை செய்ய தீர்மானித்தோம்.
இந்த வாலிபர் தொடர்பில் மேலும் விசாரணை மேற்கொண்ட போது தெளிவான ஒருவிடயம் தான்,
இவருக்கு ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களுடன் நேரடி தொடர்பு இருக்கவில்லை என்றாலும் அவரது தொலைபேசி தொடர்பு பட்டியலில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்கள் மற்றும் சஹ்ரானின் பயிற்சி முகாம்களில் செயற்பட்ட 25 நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தமை தெரிவந்துள்ளது.
மேலும் குறித்த வாலிபரின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பெறப்பட்ட தகவல்களில் படி ,
குறித்த வாலிபர் தனிமையில் வாழந்துள்ளார், அவருக்கு பெரிதாக நண்பர்கள் இருக்கவில்லை,சிறு வயதில் மார்க்க கல்வி கிடைக்காமல் பெரியவரானதும் இணையதளம் ஊடாக மார்க்க கல்வி கற்றுள்ளார்,சிறுவயதில் பள்ளிவாயலுக்கு தெழுகைக்கு செல்லாமல் பிற்காலத்தில் வீட்டிலிருந்தே
தொழுது வந்துள்ளார்.பெற்றோர் தன்னை கவனிப்பதில்லை அவதானம் செலுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த வாலிபர் அதனால் மனமுடைத்து காணப்பட்டதாக அவரது நன்பி ஒரு மூலம் உறுதியானது. மேற்குலக நாட்டவர்களால் ரகசிமாக சமுகம் இயக்கப்படுவதாக சமூகத்தில் பரவும் செய்திகள் தொடர்பில் அவர் அவதானம் செலுத்தியுள்ளமை.
மேற்குலக நாட்டவர்கள் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பு காரணமாக ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு முன்னர் மேற்குலகத்தை சேர்ந்தவர் தனிமையில் தன்னிடம் சிக்கினால் அவரை கொலை செய்யவேன் என தன்னிச்சையாக கூறியுள்ளார்.
அதாவது அவ்வாறு ஒரு நபர் சிக்கினால் தன்னால் அவரை தற்கொலை செய்துகொண்டு கொலை செய்ய முடியும் என கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் அத்தனக்கல நீதிமன்றில் மன்னிப்பு கோரியுள்ளார்.
அதேநேரம் வாலிபரிடம் மேற்கொண்ட விசாரணையில் வாலிபரின் வயது 22 ,ஈஸ்டர் தாக்குதல் நடந்து 6 வருடங்கள்,தொலைபேசி தொடர்பில் தெளிவின்மை ஏற்பட்ட போது தானும் தனது தந்தையும் இதே தொலைபேசியை பாவிப்பதாக அவர் கூறினார். அவரது தந்தையும் தற்போது மாயமாகியுள்ளர்.விஷேடமாக வாலிபரின் வயதை கருத்து கொண்டு அவரை விடுவித்துள்ளோம்.
பயங்கரவாத தடை சட்டத்தை விட மிகக் கடுமையான 3 சட்டங்களை கொண்டு வந்து இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்திற்க்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மன்றில் அறிவித்தார்.

