News

இலங்கை வரலாற்றில் அதிகம் பொய் சொன்ன ஜனாதிபதி என்றால் அது அனுர குமார திஸாநாயக தான்

இலங்கை வரலாற்றில் அதிகம் பொய் சொன்ன ஜனாதிபதி என்றால் அது அனுர குமார திஸாநாயக தான் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

கோத்தாபய ராஜபக்‌ஷ நாட்டை விட்டு ஓடிய பின்னர் அனுர திஸாநாயக தான் நாட்டை ஆட்சி செய்தது போல தற்போது பேசி திரிகிறார். அவரது தற்போதைய பேச்சுக்களை கேட்டால் அவர் இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியா அல்லது ஒன்பதாவது ஜனாதிபதியா என்கிற சந்தேகம் வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி காலத்தில் தான் வங்குரோத்து நிலையிலிருந்த இலங்கையை ஐ எம் எப் வேலைத்திடத்திட்டத்திற்கு எடுத்துச்சென்று நாட்டை மீண்டும் சுமுக நிலைக்கு கொண்டு வந்ததுடன் 20 மில்லியன் டொலராக இருந்த அன்னிய செலாவனி இருப்பை 5.9 பில்லியன் டொலராக அனுர ஜனாதிபதியாக முன்னர் அதிகரித்தார் என்பதனை தேசிய மக்கள் சக்தியின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களே பல சந்தர்ப்பங்களில் ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி கூறியதை மறந்து அனுர குமார திஸாநாயக மற்றும் அவரது கூட்டம் வங்குரோத்து அடைந்த நாட்டை 6 மாதங்களில் தூக்கி நிறுத்தியதாக கூறித்திரிகிறார்கள். இது மீண்டும் கொபெல்ஸ் கோட்பாட்டின் கொள்கையான எந்தவொரு பொய்யையும் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், கேட்பவர் அது உண்மை என்று உறுதியாக நம்புகிறார் என்பதனை நன்றாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நாட்டு மக்கள் 2022 ஜூன் மாதத்திற்கு பிறகு கோமா நிலைக்கு சென்று மீண்டும் 2024ல் அனுர ஜனாதிபதியான பிறகு விழித்தார்களா என்று நினைத்துக்கொண்டே அனுர திஸாநாயக மற்றும் அவருடைய கூட்டம் இவ்வாறு பேசிவருகிறார்கள் என்றே என்னத்தோன்றுகிறது.

Recent Articles

Back to top button