News
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸின் முன்பக்க கதவு வழியாக இளைஞர் ஒருவர் வெளியே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் பதிவு

ஹபரணையில் பயணிகள் பேருந்தில் ஏற்பட்ட விபத்து: ஒருவர் உயிரிழப்பு
நேற்று (10 ஏப்ரல் 2025) ஹபரணை பகுதியில் வைத்து திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் முன்பக்க கதவு வழியாக ஒருவர் வெளியே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
காயமடைந்த நிலையில் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போதிலும், அந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், போதிவெல, ரிக்கிலகஸ்கட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.
மரணித்தவரின் உடல் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய பயணிகள் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



