News
நேற்று முன்தினம் காணாமல் போன வரக்காபொல பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா இல்மா, மடுல்கலே பிரதேசத்தில் இருப்பது தெரிய வந்தது.

கொழும்பு – கண்டி வீதி, வரக்காபொல, தொலங்கமுவ பகுதியை சேர்ந்த பாத்திமா இல்மா எனும் 20 வயது இளம் பெண் பிள்ளையை நேற்று முன் தினம் முதல் காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்து இருந்த நிலையில் தற்போது அவர் (பன்வில, ஹுலுகங்க) மடுல்கலே பிரதேசத்தில் இருப்பது தெரிய வந்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.

