“சூப்பர் முஸ்லிம்” என்ற பெயரில் அடிப்படைவாத கொள்கை ஒன்று முஸ்லிம் சமூகத்திற்குள் உருவாகி வருகிறது ; ஜனாதிபதி

வாலிபர்களை அடிப்படைவாதத்தில் இருந்து மீட்க தேவையான அனைத்தையும் செய்வோம் என ஜனாதிபதி அனுர குமார குறிப்பிட்டார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
வாலிபர்களை அடிப்படைவாதத்தில் இருந்து மீட்க தேவையான அனைத்தையும் செய்வோம்.
சூப்பர் முஸ்லிம் என்ற பெயரில் அடிப்படைவாத கோட்பாடு ஒன்று முஸ்லிம் சமூகத்திற்குள் உருவாகி வருகிறது என கூறிய அவர் நபிகள் நாயகம் சொல்லாத திரிபுபடுத்தப்பட்ட விடயங்களை கொண்ட அடிப்படைவாத செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என கூறிய அவர் .
அந்த கொள்கை ஆபத்தானது இல்லையா என கேள்வி எழுப்பிய அவர் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேவையில்லையா என கேள்வி எழுப்பினார்.
நாம் நடவடிக்கை எடுக்கிறோம். அது முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை அல்ல.அனைத்து மக்களினதும் நன்மைக்காக எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கு அரசே இது.
அரசினதும் நாட்டு மக்களினதும் நலனுக்க்காக எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களுடனும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான் முஸ்லிம்கள் அரசோடு உள்ளார்கள் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.

