News
அரசு ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்களில் ஆறு லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர் !

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் 6000 பில்லியன் கடனாகப் பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் திரு.ரொஷான் ரணசிங்க குறிப்பிடுள்ளார்..
இவ்வாறு கடன் வாங்க நாட்டையும் மக்களையுமே அவர்கள் அடகு வைப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர்.
தொழில் ஒன்று செய்யாதவர்களால்,விவசாயம் செய்யாதவர்களால், ஆகக் குறைந்தது சில்லறை கடை ஒன்றை செய்த அனுபவம் கூட இல்லாத குழுவினால் எவ்வாறு தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



