கொழும்பு பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரையும், உள்ளே இருந்த இரு பெண்களையும் கடத்திச் சென்ற நபரை விரட்டிச் சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த பொலிஸார்

கொட்டாஞ்சேனையில் கார் திருட்டு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் – காவல்துறையினர் விசாரணை ஆரம்பம்
கொழும்பு கொட்டாஞ்சேனையில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற அதிரடித் திருட்டு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.
பொலிஸ் மீடியா பிரிவினரின் தகவலின்படி, சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் ஒருவர் தனது கர்ப்பிணியான மனைவி மற்றும் தாயுடன் ஒரு உணவகத்திற்கு அருகில் எஞ்ஜினை Off செய்யாமல் வாகனத்தை நிறுத்திய நிலையில் பார்க் செய்துவிட்டு சென்றுள்ளார். அதே சமயம், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாகனத்தில் ஏறி அதனைக் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்ருள்ளார். அந்த நேரத்தில் காரில் பெணகள் இருவரும் இருந்தனர்.
மட்டக்குளி பொலிஸாருக்கு வாகனம் திருடப்பட்டதாக தகவல் கிடைத்ததும், அவர்கள் அந்த பகுதியில் மேற்கொண்டுவரும் விசாரணையின் போது அருகிலிருந்த இடம் ஒன்றில் அந்த காரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் சந்தேகநபர் நிற்காமல் காரை ஓட்டிச் சென்றதால், காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
பின்னர், குறித்த வாகனம் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள பிளூமெண்டல் ரயில்வே தடத்தில் அருகில் நிறுத்தப்பட்டது. சந்தேகநபர் இறங்கி கால்நடையாக தப்பியோடிய நிலையில், வாகனத்தில் இருந்த பெண்கள் இருவரும் பாதிப்பின்றி மீட்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக கொட்டாஞ்சேனை காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், சந்தேகநபரை கைது செய்ய விசேட தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

