News
நாடு சிதைந்த போது இலங்கையில் ரணிலைத் தவிர நாட்டை பொறுபேற்க வேறு ஒருவர் இருக்கவில்லை ; அமைச்சர் லால்காந்த

பொருளாதார நெருக்கடியின் போது,இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு எவரும் நாட்டை பொறுப்பேற்க இருக்கவில்லை என்று அமைச்சர் திரு.லால்காந்த குறிப்பிட்டார்.
இந்த சிஸடத்திற்குள் ரணில் விக்ரசிங்க சமாளித்தார்.அது உண்மைதான்.அப்போது இலங்கையில் அவரை தவிர வேறு யாரும் இருக்கவில்லை. தற்போதுள்ள பொருளாதாரச் சிஸ்டத்தில் பின்னிப் பிணைந்து பிறந்தவர்களில் ரணிலும் ஒருவர்.
திரு.ஜெயவர்தனவுக்குப் பிறகு இந்த சிஸ்டத்தில் பிறந்த முக்கியமானவர் ரணில். அவர் இங்கு நியமிக்கப்பட்ட பிறகு, அவர் ஜனாதிபதியாக சில திட்டமிடல்களை செய்தார் என அவர் தெரிவித்தார்.

