கொழும்பு மாநகரத்தின் அடுத்த மேயர் யார்?

எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அதிக கவனத்தை ஈர்த்திருக்கும் முக்கியமான ஒரு தேர்தலாகும். உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியாகவும் இத்தேர்தல் அவதானிப்பை பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை விடவும் பாராளுமன்றத் தேர்தலை விடவும் உள்ளூராட்சி தேர்தல் முக்கியம் பெருவதற்கான காரணம் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத்துடன் மக்கள் நேரடி தொடர்பை கொண்டிருப்பதாகும்.
அதுமட்டுமன்றி, ஐனாதிபதி எந்தக் கட்சியாக இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் எந்த கட்சியாக இருந்தாலும் உள்ளூராட்சி நிர்வாகம் தமது கட்சியை சாராததாக இருந்தாலும் எந்த பாதிப்புகளையும் செய்ய முடியாத ஒரு சூழமை நிலவுவதாலும் உள்ளூராட்சி சபை நிர்வாகம் மிக முக்கியத்துவம் பெருகிறது.
தற்போது நடைபெறவுள்ள இவ்வுள்ளூராட்சி தேர்தல் தற்போதைய அரசாங்கத்திற்கும் மிக முக்கியமானதொரு தேர்தலாகும்.
இத்தேர்தலின் வெற்றி தோல்விகளே அரசாங்கத்திற்கு கிடைத்த ஆதரவு தேய்ந்திருக்கிறதா வளர்ந்திருக்கிறதா என்பதை வெளிப்படுத்தும்.இத்தேர்தலில் அரசாங்கத்தின் ஆதரவு வீழ்ச்சியடைந்தால் எதிர்நோக்கும் அரசியல் கொதிநிலையை சமாளிப்பது கஷ்டமானதாக மாறிவிடும்.
இதனைக் கருத்திற் கொண்டே தமது ஆதரவு சரிவு காணும் முன் இத்தேர்தலை நடத்தி நிலைமையை சமளிக்க அரசு முயல்கிறது
.அதனாலேயே பாராளுமன்றத் தேர்தலில் எடுக்காத சிரத்தையை ஜனாதிபதியவர்கள் இத்தேர்தலில் எடுத்திருப்பது தெரிகிறது.
இவ்வுள்ளூராட்சி தேர்தலில் முஸ்லிம் சமூகம் சிறந்ததொரு செய்தியை தெரிவிக்கும் என்பதுதெளிவாக தெரிகிறது.
முஸ்லிம் சமூகத்தை துச்சமாக நினைத்து இலங்கை அரசியல் வரலாற்றில் என்றுமே இல்லாத நிகழ்வுகளை அரங்கேற்றி இழிவுபடுத்தியமை மிக அவதானத்தை பெறும் விடயமாகும்.
அதுமட்டுமன்றி தொடராக முஸ்லிம்களை பூசிக்கொண்டு அவர்களுக்கு எதிரான பல விடயங்கள் என்றுமில்லாதவாறு அரங்கேரிக்கொண்டிருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக முஸ்லிம் கள் 38% உம் தமிழ் பேசும் மக்கள் 62% ஆகவும் கொண்ட கொழும்பில் யார் அடுத்த மேயர் என்பதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு மாநகரத்தை பொருத்தவரை எப்போதுமே இரு முணை போட்டியே நிலவுவது வழக்கம். ஆனால் இவ்வுள்ளூராட்சி தேர்தலில் நான்கு முணைப் போட்டி நிலவுவதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இதில் பெரும்பான்மை இரு கட்சிகளின் மேயர் வேட்பாளர்கள் சகோதர சிங்கள மொழி பேசுபவர்களாகவும் மற்றும் இரு கட்சிகளின் மேயர் வேட்பாளர் தமிழ் மொழி பேசுபவராகவும் இருக்கிறார்கள்.
இத்தேர்தலில் தனக்கென தனியிடத்தை சென்ற உள்ளூராட்சி தேர்தலில் பெற்றுக்கொண்ட வண்ணாத்திப்பூச்சி சின்னத்தை கொண்ட ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பு பாரிய வளர்ச்சியையும் கொழும்பு முஸ்லிம்களின் பேரபிமானத்தையும் பெற்றுவருவதும் ஓர் அவதானிப்பை பெற்றுள்ளது. இக்கட்சியின் மேயர் வேட்பாளர் ஒரு தொழிலதிபராகவும் மக்கள் சேவகராகவும் இருபது முக்கிய அம்சமாகும்.
ஆளும் NPP மற்றும் SJP கட்சிகளின் மேயர் வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் அறிமுகமில்லாத வேற்றுகிரகத்திலிருந்து குதித்து வந்தவர்கள் போன்று இருப்பதாக மக்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.
இத்தேர்தல் தமிழ் பேசும் மக்கள் தங்கள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் ஒரு தேர்தலாக இருக்குமா அல்லது ஏனைய பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம்கள் போன்று கொழும்பு முஸ்லிம்களும் தங்களுக்கு இந்த ஆட்சியில் நிகழ்ந்த புறக்கணிப்புக்களுக்கு நல்லதொரு செய்தியை சொல்லும் ஒரு தேர்தலாக அமையப் போகிறதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
வெளிப்படையான கெட்டவர்களை விட நல்லவர்கள் போன்று வேசம்போட்டு தீமை செய்பவர்கள் மிக ஆபத்தானவர்கள் என்பதை மனம்கொள்க!
முஹம்மது இக்பால் – புதுக்கடை

