News
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை !

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை என பிள்ளையானின் சட்டத்தரணி உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
தான் பிள்ளையானை சட்டத்தரணி என்ற வகையில் சந்தித்தாக கூறும் அவர் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் தாம் 1/2 மணிநேரம் உரையாடியதாக கூறினார்.
இதன் போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை எனவும் அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியதாக பிள்ளையானின் சட்டத்தரணி உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்ற காலத்தில் பிள்ளையான் சிறையில் இருந்ததாக கூறிய உதய கம்மன்பில ஈஸ்டர் தாக்குதலை பிள்ளையானோடு தொடர்புபடுத்துபவர்களின் மூளையை பரிசோதிக்க வேண்டும் என கூறினார்.

