ரவூப் ஹக்கீம் சமூகத்தை ஏமாற்றுகிறார் என தெரிந்து கொண்டே அவரின் கட்சிக்கு தொடர்ந்தும் ஓட்டு போட்டு ஏமாறும் கிழக்கு முஸ்லிம்களை நினைத்தால் பொறுக்க முடியவில்லை; முபாறக் மவ்லவி

தொடர்ந்தும் ஏமாறும் முட்டாளாக ஹக்கீம்.
ஹக்கீம் முட்டாள் என்பது, இன்று நேற்றல்ல, 2002ம் ஆண்டு முதல் அடிக்கடி முட்டாளாகி கொண்டுதான் இருக்கிறார். அப்போதும் நான் சொன்னேன் ஹக்கீம் 2000ம் ஆண்டு முதல் 2002 வரை மூன்று தடவை ஏமாந்து முட்டாள் ஆகிவிட்டார் என்று.
கண்ணை மூடிக்கொண்டு குழியில் விழுந்து விட்டோம் என்பது ஏமாந்த பின் ஹக்கீம் சொல்லும் வார்த்தைகள்.
இப்போது 2025ம் ஆண்டு. இன்னமும் ஏமாறுவதும் சமூகத்தை ஏமாற்றுவதுமே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் வழமை.
இதுவரை ஹக்கீம் 100 தடவைக்கு மேல் முட்டாளாகி விட்டார். அவர் முட்டாள் ஆனால் பிரச்சினையில்லை. சமூகத்தையும் முட்டாள் ஆக்கி விட்டார்.
இப்போது டெலிபோன் சின்னம் செத்து விட்டதாம். எப்போதாவது டெலிபோன் அரசாக உயிர் வாழ்ந்ததா? 2019ல் உருவான ரெலிபோன் அப்போதே ஜனாதிபதி தேர்தலில் தோற்று விட்டது. பின்னர் 2020 பொது தேர்தலில் தோல்வியுற்று எதிர் கட்சியில் செத்து கிடந்தது. இதுவெல்லாம் தெரிந்தும் ஏன் ஹக்கீம் 2024 ஜனாதிபதி தேர்தலில் டெலிபோனை ஆதரித்தார்?
சரி. அதிலும் டெலிபோன் தோற்ற பின்பாவது புத்தி வரவில்லையா?
மீண்டும் 2024 பொது தேர்தலில் டெலிபோனில் இணைந்து தானும் முட்டாளாகி சமூகத்தையும் முட்டாளாக்கினார்.
ஒரு மனிதன் ஒருதடவை ஏமாறலாம். இரண்டு தடவை ஏமாறலாம். தொடர்ந்தும் ஏமாறுபவன் படு முட்டாள். ஹக்கீம் முட்டாளாகவே இருக்கட்டும். அது எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவர் சமூகத்தை ஏமாற்றுகிறார் என தெரிந்து கொண்டே அவரின் கட்சிக்கு தொடர்ந்தும் ஓட்டு போட்டு ஏமாறும் கிழக்கு முஸ்லிம்களை நினைத்தால் பொறுக்க முடியவில்லை.
ஹக்கீம் அடிக்கடி பெல்டி அடிப்பவர் என்று தெரிந்தும் அவருக்கு சீட் கொடுத்த சஜித் யார்?
முபாறக் அப்துல் மஜீத் முப்தி
உலமா கட்சி.



