News
சர்வதேச புத்தாக்குனர் கண்காட்சி மற்றும் போட்டி நிகழ்ச்சியில் ஹபுகஸ்தலாவை மாணவன் அப்துல் மலிக்

கடந்த ஆண்டு இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு
மற்றும் இலங்கை விஞ்ஞான முன்னேற்ற கழகம் இணைந்து நடாத்திய அகில இலங்கை பாடசாலை புத்தாக்கவியல் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை ஹபுகஸ்தலாவை அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் மாணவன் அப்துல் மலிக் பெற்றுக்கொண்டார்…
பாடசாலையின் சாதாரண தர மாணவனான மலிக்கினால் அதிகவலு சக்தி மிக்க ஒலிபிரப்பாக்கி(High Power Speaker Amp) கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இம்மாதம் 25,26,27 கொழும்பு பண்டார நாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் “சாஹசக் நிமவும்” சர்வதேச புத்தாக்கங்கள் கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதில் பங்கேற்றுள்ளார்….
முயற்சிகள் சிறக்கவும் பல சாதனைகளை படைக்கவும் வாழ்த்துக்கள்.
தகவல் : சல்மான்






