News

மே தின கூட்டத்தை “சிஸ்டம் சேஞ்ச்” செய்து பணத்தை மக்கள் நலத்திட்டத்திற்கு பயன்படுத்தியிருக்கலாம் !

பழைய சிஸ்டத்திலேயே அரசாங்கத்தின் மேதின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

“ஜனாதிபதியின் எளிமை பிரபலியப்படுத்தப்படும் அளவிற்கு NPP யின் வீண்விரயங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பது மனவேதனை.”

“NPP யின் Poster ஒட்டும் கலாசாரம், அதிக வீண்விரயமான கூட்டங்கள், ஊடகங்கள் மூலம் கேள்விப்படுகின்ற சில தேர்தல் விதிமீறல் செயற்பாடுகள் கண்டு கொள்ளப்படாமல் ஜனாதிபதியின் எளிமைக்குள் மறைந்துவிடுகிறது.”

“சிஸ்டம் change, clean srilanka வேலைத்திட்டங்களினூடாக இவ்வாண்டு மேதின கூட்டங்களை NPP அரசாங்கம் வழமைக்குமறாக முன்மாதிரியாக செய்திருக்கலாம்.”

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் may முதலாம் தேதி உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கமைவாக உலகெங்கும் மேதினத்தை கொண்டாடுகின்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் மேதின வாழ்த்துக்கள்.

மேதின கூட்டங்கள் ஆண்டுதோறும் அரசியல் கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதானது இலங்கையில் ஒரு பொதுவான விடயம் என்றாலும் இவ் ஆண்டு அரசியல் கட்சிகளினால் நடாத்தப்பட்ட அல்லது தற்போதய சிஸ்டம் change அரசாங்கத்தினால் நடாத்தப்படுகின்ற மேதின நிகழ்வுகளில் புதிய மாற்றங்களும், முன்மாதிரிகளும், வீண்விரயங்களும் இல்லாமல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு ஆனால் அவ் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது கேள்விக்கிறியே.

இதற்கு முன்பிருந்த அரசாங்களினால் கூட இதேபோன்ற வீண்விரயங்களான மேதின கூட்டங்கள் நடைபெற்றதை அவதானித்து இருக்கின்றோம்.

இம்முறை NPP அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட மேதின நிகழ்வுகளுக்குக் கூட பல லச்சக் கணக்கான வீண்விரயம், பல் ஆயிரக்கான பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக எம்மால் அறியமுடிகின்றது.

இவ்வாறான வீண்விரயங்களை தவிர்த்து சிஸ்டம் change க்கூடாக சாதாரணமாக ஏற்பாடு செய்து , மக்கள் நலன் சார்ந்த அரசாங்க திட்டங்களுக்கு பயன்படுத்தி இருந்தால் முன்மாதிரியாக இருந்திருக்கும்.

MLM.சுஹைல்

Recent Articles

Back to top button