News

ருஷ்டியின் நேரம் நல்லம் தேர்தல் ஒன்று வந்ததால் இன்று வெளியே உள்ளார்.. தேர்தல் காலமாக இல்லாமல் இருந்திருந்தால் ருஷ்டி இன்று உள்ளே இருந்திருப்பார்.

இது தேர்தல் காலம் என்பதால் ருஷ்டி வெளியே உள்ளதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் ,

உங்களுக்கு தெரிந்திருக்கும் ருஷ்டி என்ற வாலிபர் இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ருஷ்டியின் கைது விவகாரம் தொடர்பில் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கப்பட்ட போது கைதை நியாயப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றின் உரையாற்றினார்.

அதன்போது ஸஹ்ரான் குழுவினரின் வகுப்பு சென்றவர்களின் தொலைபேசி இலக்கங்கள் 22 வயது ருஷ்டியின் தொலைபேசியில் இருந்ததாக கூறினர்.அதனை தொடர்ந்துவந்த நாட்களில் கிழக்கு மாகாணம் சென்ற ஜனாதிபதி ருஷ்டிக்கு ஸ்டிக்கர் ஒட்டியமை தவிர வேறு குற்றச்சாட்டு எதுவும் இல்லை என கூறினார்.அவரை விடுதலை செய்தாக கூறினார்.

இவர்கள் இருவரினதுன் கதைகளை பார்க்கும் போது ஒரு இடத்தில் அரசாங்கம் கைதை நியாயப்படுத்தவும் மறு இடத்தில் முஸ்லிம்களை திருப்திபடுத்தவும் செயற்பட்டமை தெளிவானது. ருஸ்டியின் கைது விடயத்தில் அரசின் இரட்டை வேடமும் தெளிவானது.

ருஷ்டியின் நேரம் நல்லம் என்பதால் தேர்தல் ஒன்று வந்தது அதனால் இன்று வெளியே உள்ளார்.இதே தேர்தல் காலமாக இல்லாமல் இருந்திருந்தால் ருஷ்டி இன்றும் உள்ளே இருந்திருப்பார் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும் என கூறினார்.

Recent Articles

Back to top button