மரம் மற்றும் தராசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் !

எதிர் வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் நாடாளாவிய ரீதியில் பல உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ‘தராசு’ சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றது. மேலும் பல சபைகளுக்காக இரண்டு கட்சிகளும் தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன.
அவ்வாறு இணைந்து போட்டியிடும் உளாளூராட்சி மன்றங்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரண்டு கட்சிகளும் கடந்த மாதம் (ஏப்ரல்) முதலாம் தேதி கைச்சாத்திட்டன.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது அக்கட்சியின் சார்பில் அதன் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் மற்றும் ஐக்கிய தேசிய கூட்டமைப்பு சார்பில் அதன் செயலாளர் நாயகம் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் மஸீஹுதீன் நயீமுல்லாஹ் ஆகியோர் கையொப்பமிட்டனர்.



