News
எதிர்க்கட்சிகள் படுதோல்வி ! ஜனாதிபதி சொன்னது போல் எமக்கு உள்ளே தான் சவால்கள் உள்ளன !

இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் படுதோல்வியடைந்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
“சஜித் செப்டம்பர் அல்லது ஒக்டோபருக்குள் ஜனாதிபதியாக வேண்டும் என்று கனவு காண்கிறார். 339ல் 15-20 வெற்றி பெற முடியாத கட்சியில் இருந்து ஜனாதிபதி ஆக முடியுமா?
05ல் வெற்றி பெற முடியாத ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கனவில் கூட வர முடியுமா? எதிர்கட்சிகளின் படுதோல்வி தெளிவாகிறது. மீண்டும் வாய்ப்பு இல்லை. ஜனாதிபதி சொன்னது போல் எமக்குள் தான் சவால் உள்ளது”.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.



