News

புத்த பெருமான் எமக்கு சமாதானத்தின் வழியை காட்டித்தந்துள்ளார்;மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு நேற்றுிரவு விசேட உரையாற்றியிருந்தார். தொலைக்காட்சி அது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்தியா மீது மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இனி வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் சூளுரைத்தார்.

இந்தியா – பாகிஸ்தான் மோதல் விவகாரம் உரையின் முக்கிய பேசு பொருளாக இருந்தது.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த மோதலுக்குப் பின்னர் அவர் ஆற்றிய முதல் தொலைக்காட்சி உரை இதுவாகும்.

இரு நாடுகளுக்கும் இடையேயான பூசல் நிரை மேலும் மோசமடையும் பட்சத்தில் அணுவாயுதங்களைக் கொண்டு, மிரட்டும் பாகிஸ்தானின் போக்கைப் புதுடில்லி பொறுத்துக்கொள்ளாது என்றும் இந்தியப் பிரதமர் கூறினார்.

கடந்த சில நாட்களில் நாட்டின் திறமையையும் பொறுமையையும் நாம் அனைவரும் கண்டோம். ஆயுதப்படைகள், ராணுவம், உளவுத்துறை மற்றும் விஞ்ஞானிகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். நம் ஆயுதப் படைகளின் இந்த வீரம், துணிச்சலை நமது நாட்டின் ஒவ்வொரு தாய்க்கும், சகோதரிகளுக்கும், ஒவ்வொரு மகள்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.

பஹல்காம் தாக்குதல் பெரும்வேதனைக்குரிய சம்பவம். அந்தக் கொடூர தாக்குதலை நடத்திய பயங்ரவாதிகளை ஒழித்துக்கட்ட சிந்தூர் ஆபரேஷனை நடத்தினோம். பயங்கரவாதத்தை ஒழிக்க நம் ஆயுதப் படைகளுக்கு சுதந்திரம் வழங்கினோம். அவர்கள் வீரத்துடனும், துணிச்சலுடனும் செயல்பட்டதை நாம் எல்லோரும்க் பார்த்தோம். ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பது வெறும் பெயரல்ல, அது நம் நாட்டு உணர்வின் அடையாளம்.

மே 6 ஆம் தேதி இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களை குறிவைத்தன. இந்தியா இவ்வளவு வலுவான நடவடிக்கை எடுக்கும் என்று பயங்கரவாதிகள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

உலகில் எங்கு தீவிரவாதம் நடந்தாலும், அதில் பாகிஸ்தான் முகாம்களுக்கு பங்குண்டு. அப்படி உலகளாவிய பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்த பாகிஸ்தானின் பஹாவல்பூர் மற்றும் முரிட்கேவை நாங்கள் குறிவைத்து நாம் தாக்கினோம். ஆனால், பாகிஸ்தான் இந்தியாவின் பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் ராணுவ தளங்களைக் குறிவைத்தது. அதை நமது ராணுவம் துணிச்சலுடனும் எதிர்கொண்டு, அவர்களது தாக்குதல்களை முறியடித்தது.

எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானுக்குப் பலத்த சேதத்தை கொடுத்துள்ளது இந்தியா. அதனால்தான், இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் இதில் தலையிட கெஞ்சியது. இந்த போர் இடை நிறுத்தம்தான் செய்யப்பட்டுள்ளது, முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதத்தை ஒழிக்கும் வரை இந்தப் போர் முடியாது.

தண்ணீரும் இரத்தமும் ஒன்றாகப் பயணிக்க முடியாது. அப்படி பயணித்தால் அது ஆபத்தாகிவிடும். அப்படித்தான் பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் முற்றிலும் முரணானது. அது இரண்டும் ஒரே பாதையில் பயணிக்க முடியாதது. அதுபோல பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது.

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதத்துடனான பேச்சுவார்த்தைக்குச் சமமானது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமிக்கும் இந்தியாவின் ஜம்மு – காஷ்மிர் பிரச்னையை பற்றியதாகத்தான் இருக்கும்.

எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானுக்குப் பலத்த சேதத்தை கொடுத்துள்ளது இந்தியா. அதனால்தான், இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் இதில் தலையிட கெஞ்சியது. இந்த போர் இடை நிறுத்தம்தான் செய்யப்பட்டுள்ளது, முடிவுக்கு வரவில்லை. பயங்கரத்தை ஒழிக்கும் வரை இந்தப் போர் முடியாது

பயங்கரவாதிகளின் செல்வாக்கின் கீழ் உள்ள அரசாங்கமும், பயங்கரவாதிகளின் கீழ் செயல்படும் கூலிப்படைகளும் ஒன்றுதான். இரண்டையும் நாங்கள் வேறுபடுத்திப் பார்க்க மாட்டோம். பாகிஸ்தான் உயிர்பித்து இருக்க வேண்டுமென்றால், அது அதன் பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றியாக வேண்டும்.

இது போருக்கான காலம் அல்ல. ஆனால் அதே சமயம் இது பயங்கரவாதத்திற்கான காலமும் அல்ல. போர் எங்கள் நோக்கமல்ல, பயங்கரவாதம் இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்.

இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நாங்கள் கடுமையான பதிலடி கொடுப்போம். எந்தவொரு அணு ஆயுத அச்சுறுத்தலையும் இந்தியா அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்காது.” என்றார்.

இன்று வெசாக் தினம்.புத்த பெருமான் எமக்கு சமாதானத்தின் வழியை காட்டித்தந்துள்ளார்.மனித குலத்தினர் சமாதானத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என்றால் அனைத்து இந்தியர்களும் சமாதானத்தினால் மிளிரவேண்டும்.அதற்காக இந்தியா பலம் பெற வேண்டும் என்பதோடு அந்த சக்தியை தேவையேற்பட்டால் பாவிக்கவும் வேண்டும் என கூறினார்.

Recent Articles

Back to top button