News
ஹரினின் வெற்றிடத்துக்கு ஹரீனின் பழைய கூட்டாளி ஹிருணிகா
ஹரின் பெர்னாண்டோவை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கியமை சட்டத்துக்கு உடன்பட்டது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து தன்னுடைய அமைச்சுக்கு சென்ற சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஊழியர்களுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு அமைச்சில் இருந்து, வௌ்ளிக்கிழமை (08) வெளியேறினார்.
இந்நிலையில், ஹரினின் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை நியமிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.